< Back
மாநில செய்திகள்
வளர்ப்பு நாய்களை வேட்டையாட கூண்டை சுற்றி சுற்றி வந்த சிறுத்தை - வீடியோ வைரல்
மாநில செய்திகள்

வளர்ப்பு நாய்களை வேட்டையாட கூண்டை சுற்றி சுற்றி வந்த சிறுத்தை - வீடியோ வைரல்

தினத்தந்தி
|
20 July 2024 12:26 AM IST

நாய்கள் பாதுகாப்பாக கூண்டிற்குள் இருந்ததால் சிறுத்தையால் வேட்டையாட முடியவில்லை.

ஊட்டி,

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மேல்தட்டப்பள்ளம் பகுதி உள்ளது. இப்பகுதியில் வனப்பகுதியையொட்டி தேயிலை தொழிற் சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை அலுவலர் குடியிருப்பு பகுதியில் 3 கூண்டுகளில் வளர்ப்பு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று காலை சிறுத்தை ஒன்று அங்கு வந்தது. பின்னர் வளர்ப்பு நாய்களை வேட்டையாட முயன்றது. ஆனால், நாய்கள் பாதுகாப்பாக கூண்டிற்குள் இருந்ததால் சிறுத்தையால் வேட்டையாட முடியவில்லை. இதனால் சிறுத்தை கூண்டை சுற்றி, சுற்றி வந்தது. பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது.

நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு, குடியிருப்பில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்