< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நீலகிரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சிறுத்தை நடமாட்டம் - சி.சி.டி.வி.யில் பதிவான காட்சி
|22 Jun 2024 2:16 PM IST
நீலகிரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சிறுத்தை உலா வந்த காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஊட்டி அருகே உள்ள தூனேரி என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியே வர வேண்டாம் எனவும், சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.