< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தருமபுரி பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி - வனத்துறை எச்சரிக்கை
|21 Oct 2023 10:16 PM IST
தருமபுரி பாலக்கோடு அருகே சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சாமனூர் கிராமத்தில் சிறுத்தைப்புலி ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் மலை உச்சியில் சிறுத்தைப்புலி அமர்ந்திருக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதுவரை வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.