< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கன்றுக்குட்டியை கடித்துக்கொன்ற சிறுத்தை
|27 Aug 2022 12:30 AM IST
தேன்கனிக்கோட்டையில் கன்றுகுட்டியை கடித்துக்கொன்ற சிறுத்தை தப்பி சென்றது.
தேன்கனிக்கோட்டை:-
தேன்கனிக்கோட்டை தாலுகா ஏணிமுச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் தொட்டைய்யா (வயது 65). விவசாயியான இவர், நேற்று வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது நிலத்தில் கன்று குட்டியை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தார். அப்போது சிறுத்தை ஒன்று கன்று குட்டியை கடித்து தாக்கியது. இதைக்கண்டு தொட்டைய்யா சத்தம் போடவே அது வனப்பகுதிக்குள் ஓடியது. படுகாயம் அடைந்த கன்றுக்குட்டி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தது.
இதையடுத்து இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.