< Back
மாநில செய்திகள்
லியோ காட்சி ரத்து - தியேட்டர் மீது ரசிகர்கள் கல்வீசியதால் பரபரப்பு
மாநில செய்திகள்

லியோ காட்சி ரத்து - தியேட்டர் மீது ரசிகர்கள் கல்வீசியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
19 Oct 2023 12:53 PM IST

சேலத்தில் லியோ காட்சி ரத்து செய்யப்பட்டதையொட்டி தியேட்டர் மீது ரசிகர்கள் கல்வீசியதால் பரபரப்பு எற்பட்டது.

சேலம்,

தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ளது. இதையொட்டி படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் சிறப்பான ஏற்பாடுகள் படத்தை பார்த்து சென்றனர். இதே போல சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில் உள்ள 4 தியேட்டர்களில் இன்று லியோ படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பேர் இன்று காலை முதலே தியேட்டருக்கு திரண்டு வந்தனர்.

அப்போது தியேட்டர்கள் முன்பு லியோ திரைப்படம் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அப்போது சில ரசிகர்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் திடீரென ஒரு தியேட்டரில் கல்வீசி தாக்கினர். இதில் தியேட்டரின் கண்ணாடி உடைந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுப்பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரசிகர்களை தியேட்டரில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் ஆத்தூர் நகரில் லியோ காட்சிகள் ரத்து செய்யப்பட்ட 4 தியேட்டர்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திடீரென காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து கேட்ட போது விநியோகஸ்தர்களுக்கும், திரையங்க உரிமையாளர்களுக்கும் உடன்பாடு ஏற்படாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்