< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
ஓரியூர் அருளானந்தர் ஆலயத்திற்கு தவக்கால திருயாத்திரை
|2 April 2023 12:15 AM IST
குருமிலாங்குடியில் இருந்து ஓரியூர் அருளானந்தர் ஆலயத்திற்கு தவக்கால திருயாத்திரை நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா குருமிலாங்குடி புனித சுவக்கீன் அன்னாள் ஆலயத்தில் இருந்து பங்குத்தந்தை மரிய அந்தோணி தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இறைமக்கள் தவக்கால திருப்பயணமாக ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். செல்லும் வழியில் ஏசுவின் பாடுகளை நினைவு கூறும் விதமாக பாடல்களை பாடிக் கொண்டும் சிலுவைப்பாதை, ஜெபமாலை செய்தும் பயணம் செய்தனர். ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் அருட்தந்தை மரிய அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இறை மக்கள் சிறப்பு ஜெபம் செய்து வழிபட்டனர். இங்கு தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.