< Back
மாநில செய்திகள்
விலை வீழ்ச்சியால் வீணாகி வரும் எலுமிச்சை பழங்கள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

விலை வீழ்ச்சியால் வீணாகி வரும் எலுமிச்சை பழங்கள்

தினத்தந்தி
|
13 July 2023 11:51 PM IST

வடகாடு பகுதியில் விலை வீழ்ச்சியால் எலுமிச்சை பழங்கள் வீணாகி வருகிறது என்று விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

விலை வீழ்ச்சி

வடகாடு மற்றும் மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் எலுமிச்சை உற்பத்தி விவசாயிகள் மூலமாக நடைபெற்று வருகின்றன. நாள் தோறும் சுமார் 5 டன் முதல் 15 டன் வரை எலுமிச்சை மகசூல் இருந்தும் விற்பனை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி அடைந்து வருகின்றனர். கடந்த வாரங்களில் எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ.15 முதல், ரூ.12 வரை விற்பனை ஆகி வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ ரூ.7 முதல் ரூ.5-க்கும் விற்பனை ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடும் கோடை வெயில் மாதங்களான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் எலுமிச்சை பழங்களின் விலை ஓரளவுக்கு உயர்வு கண்டு கிலோ ரூ.40 முதல் ரு.50 வரை விற்பனை ஆகி வந்தது.

வேதனை

ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக, எலுமிச்சை பழங்களின் உற்பத்தி முற்றிலுமாக வீழ்ச்சியடைந்து எலுமிச்சை பழக்கடைகளுக்கு கூட குறைந்த அளவிலான பழங்களே விற்பனைக்கு வந்தன. தற்போது அதிக அளவில் எலுமிச்சை பழங்களின் உற்பத்தி இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும், வெளி மாநில, வெளி மாவட்டத்தில் இருந்து எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்து வர தொடங்கியதன் விளைவாக விலை வீழ்ச்சி கண்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர். மேலும் விலை வீழ்ச்சியால் எலுமிச்ைச பழங்கள் மரத்தில் பறிக்காமல் கிழே விழுந்து வீணாகி வருகிறது.

மேலும் செய்திகள்