< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்
|18 Nov 2023 11:50 AM IST
நிதானம் தவறிய சொற்களை சட்டமன்றத்தில் சிலர் பயன்படுத்தியதாக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறினார்.
சென்னை,
கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்போது பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறியதாவது;
'சட்டமன்றம் மிகப்பெரிய மான்பும், மரபும் மிக்கது. இதனை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது. நிதானம் தவறிய சொற்களை இங்கு நிறைய பேர் பேசியுள்ளனர். பாஜக அரசாங்கம், கவர்னர் என்று பேச வேண்டிய அவசியம் இல்லை.' இவ்வாறு அவர் பேசினார்.