< Back
மாநில செய்திகள்
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும்

தினத்தந்தி
|
8 Jun 2023 12:20 AM IST

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய விவசாய முன்னணியின் பிரதிநிதிகள் விஜய முருகன், காளிராஜ், முருகன் உள்ளிட்டோர் மாணிக்கம் தாகூர் எம்.பி.யிடம் மத்திய அரசை வலியுறுத்தக்கோரி கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும். இடுபொருள்கள் விலை உயர்வு காரணமாக 80 சதவீத விவசாயிகள் விவசாய பணியில் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. எனவே விவசாயிகளுக்கான அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். 2022-ம் ஆண்டு மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். லக்கிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய உள்துறை இணை மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும். வறட்சி காலத்தில் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் விவசாயிகளின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்