< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - கருணாஸ்
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - கருணாஸ்

தினத்தந்தி
|
18 July 2022 7:59 PM IST

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கருணாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சே.கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

மாணவி ஸ்ரீமதியின் மரணமும், கள்ளக்குறிச்சி கலவரமும் தமிழ்நாட்டை கடந்த சில நாட்களாக உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. இனியாவது தமிழக அரசு, கள்ளக்குறிச்சி கலவரத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தனியார் பள்ளிகள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

ஸ்ரீமதியின் மரணத்தில் நிறைய மர்மங்கள் இருப்பதாக தெரிகிறது. மாணவியின் மர்மச்சாவு குறித்து தகுந்த விரிவான விசாரணை நடத்தி, தவறு இழைத்தவர்களை தண்டிக்கவேண்டும்.இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினர் இனியும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக கலவரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பின்னணியில் இருந்து கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். தனியார் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு இனி வரம்பு கட்டவேண்டும். அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை பெருக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்