< Back
மாநில செய்திகள்
மின்வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை
தேனி
மாநில செய்திகள்

மின்வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை

தினத்தந்தி
|
23 Nov 2022 12:30 AM IST

தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய மேற்பார்ைவ பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தற்போது மழைக்காலமாக இருப்பதால் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சேதமடைந்து மின் கம்பிகள் தரையில் விழுந்து கிடந்தாலோ அல்லது தாழ்வாக தொங்கிக் கொண்டு இருந்தாலோ பொதுமக்கள் யாரும் அதனை தொட வேண்டாம். அதுபோன்று சம்பவம் நடந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும் விவசாய பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து காக்கும் பொருட்டு விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதால் அதனை பொதுமக்கள் அறியாமல் மின்வேலியை தொடும்போது மின்விபத்துகள் நிகழ்கின்றன. எனவே மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு மின்வேலி அமைத்து இருப்பதை மின்வாரியம் கண்டறிந்தால் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் மின்வாரியத்துக்கு புறம்பாக தவறுதலாக மின்வேலி அமைக்க பயன்படுத்திய மின் இணைப்பு எண் நிரந்தரமாக துண்டிப்பு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்