< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை -  காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
19 Sept 2023 9:47 PM IST

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

சென்னை,

பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது. பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, யூ டியூபர் டிடிஎப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புழல் சிறையில் டிடிஎப் வாசன் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிடிஎப் வாசன் கைதை சுட்டிக்காட்டி கலெக்டர் கலெக்டர் கலைச்செல்வி மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்களை அச்சுறுத்தல் , போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் வாகனம் ஓட்டுவோர் மீது சட்டப்படி குற்ற வழக்குக்கள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்