< Back
மாநில செய்திகள்
கொடைக்கானலில் ரூ.2¼ கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கொடைக்கானலில் ரூ.2¼ கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி

தினத்தந்தி
|
14 Oct 2023 3:30 AM IST

கொடைக்கானலில் ரூ.2¼ கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொடைக்கானல் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர் மழையால் மின்விளக்குகள் அவ்வப்போது பழுதடைந்து வருகின்றன. இதனால் பழைய மின்விளக்குகளை அகற்றி மின்சாரத்தை சேமிக்கும் எல்.இ.டி. மின்விளக்குகளை பொருத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் புதிய இடங்களையும் தேர்வு செய்து மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 1,918 எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.

இதையொட்டி எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடக்க விழா, கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. இதில், நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மின்விளக்குகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். விழாவில் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், கவுன்சிலர் சுப்பிரமணிய பால்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்