< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
நெடுஞ்சாலையோரம் சாய்ந்து கிடக்கும் இரும்பு தடுப்புகள்
|15 Aug 2023 1:27 AM IST
நெடுஞ்சாலையோரம் சாய்ந்து கிடக்கும் இரும்பு தடுப்புகள்
மெலட்டூர் அருகே சுரைக்காயூர் பகுதியில் நாகலூர், நெடார் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வெட்டாறு கரையோரங்களில் பல இடங்களில் சாலையோரம் இரும்பினால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரும்பு தடுப்புகள் முறையாக கான்கிரீட் போட்டு அமைக்கப்படாததால், பல இடங்களில் தரையில் சாய்ந்து பயனற்று கிடக்கிறது. மேலும் நெடுஞ்சாலையோரத்திலும் தடுப்புகள் சாய்ந்து கிடக்கின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை சாய்ந்து கிடக்கும் இரும்பு தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.