< Back
மாநில செய்திகள்
சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்

தினத்தந்தி
|
10 Sept 2023 12:45 AM IST

சீர்காழி அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீர்காழி;

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பிச்சைக்காரன் விடுதி பகுதியில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு மின் கம்பம் கடந்த பல மாதங்களாக சாய்வாக ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க கோரி விவசாயிகள் பலமுறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பிச்சைக்காரன் விடுதி செல்லும் சாலையில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்