சேலம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
|தலைவாசல்:-
சிறுவாச்சூரில் வருகிற 16-ந் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தலைவாசலில் உள்ள கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி அலுவலகம் எதிரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான ராமசாமி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 16-ந் தேதி சிறுவாச்சூரில் அ.தி.மு.க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவரும், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களோடு பொங்கல் விழா கொண்டாடுகிறார். விழாவில் 100 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்குகிறார். தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து பேசுகிறார். முன்னதாக சிறுவாச்சூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
கரும்பு, மஞ்சள்
எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பிக்க ேவண்டும். சிறுவாச்சூர் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடும் வகையில் கரும்பு, மஞ்சள் மாவிலை, வாழை இலை தோரணமும் கட்டப்பட உள்ளது., காளை மாட்டுடன், சர்க்கரை பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாட உள்ளார். வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தலைவாசல் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சேகர், ஒன்றிய பொருளாளர் தர்மராஜா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் ஜெகதீசன், காளியண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறுவாச்சூர் சுமதி பெரியசாமி, தியாகனூர் ஆனந்தன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலகிருஷ்ணன், மதியழகன், ஊனத்தூர் ராமசாமி, அருணாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மெய்யன், சின்னத்தம்பி, தலைமை கழக பேச்சாளர் சேவல் அன்பழகன், பெரியேரி பாலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் காட்டுக்கோட்டை பழனிவேல், வரகூர் குள்ளுதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.