பெரம்பலூர்
கோர்ட்டு பணிகளை புறக்கணித்த வக்கீல்கள்
|பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் போக்சோ சட்டம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனியாக ஒரு சிறப்பு நீதிமன்றம் பெரம்பலூரில் நிறுவிட வேண்டும். பெரம்பலூரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சிறப்பு நீதிபதி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். பெரம்பலூரில் கூடுதல் சார்பு நீதிமன்றம் விரைவில் அமைத்திட ஆவண செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பார் அசோசியேஷனை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்கள் நேற்று ஒருநாள் மட்டும் அனைத்து கோர்ட்டுகளிலும் பணிகளை புறக்கணித்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. ஏற்கனவே அச்சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் கடந்த 25-ந்தேதி மதுரை மாவட்ட போலீசாரை கண்டித்து ஒரு நாள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.