< Back
மாநில செய்திகள்
நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
26 April 2023 12:54 AM IST

நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் மாவட்ட நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் முபாரக் அலி, ராஜசேகரன், ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல் கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் கு.பழனி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில் அகஸ்டின், நிவேதா, கம்ஸ் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்