திருநெல்வேலி
அம்பையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
|அம்பையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அம்பை:
அம்பை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு வக்கீல்கள் அம்பை கோர்ட்டின் அதிகார எல்லையில் இருந்து ஆழ்வார்குறிச்சி மற்றும் கடையம் குறுவட்டங்களை தென்காசி கோர்ட்டுக்கு மாற்றியதை கண்டித்தும், அதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பை கோர்ட்டில் உள்ள மூன்று சங்கங்களில் கூட்டுக் குழுவின் நடவடிக்கைப்படி இதே கோரிக்கை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். அட்வகேட் அசோசியன் தலைவர் செல்வ அந்தோணி, வழக்காடும் வக்கீல் சங்க தலைவர் வரம் தரும் பெருமாள் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் வள்ளுவராஜ், செந்தில்குமார், முகமது சபி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 3 சங்கங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.