< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
தேனி
மாநில செய்திகள்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
16 Dec 2022 12:30 AM IST

தேனியில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தேனி வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வக்கீல்கள் சங்க உறுப்பினர்களான செல்வக்குமார், கலையரசன் ஆகியோரை தேனியில் அவமரியாதையாக நடத்திய போலீஸ் துணை சூப்பிரண்டுவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வது என்றும், இந்த சம்பவத்துக்கு துணை சூப்பிரண்டு வருத்தம் தெரிவிக்காவிட்டால் தொடர் கோர்ட்டு புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கோர்ட்டு முன்பு வக்கீல்கள் போலீஸ் துணை சூப்பிரண்டுவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டு போலீஸ் துணை சூப்பிரண்டுவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்