< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 4:45 AM IST

திண்டுக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் உதயகுமார், பொருளாளர் பிரேமா உள்ளிட்ட நிர்வாகிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது வழக்கு கோப்புகளை ஆன்லைனில் பதிவு செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அந்த முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதேபோல் வேடசந்தூர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது வழக்குகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் நடைமுறையை தவிர்த்து பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் வேடசந்தூர் வக்கீல்கள் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் பாலமுருகன், துணைத்தலைவர் கந்தசாமி, இணைசெயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் தேவா மற்றும் மூத்த வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்