< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
மாநில செய்திகள்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 1:15 AM IST

ஊட்டியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஊட்டியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு நுழைவு வாயில் முன்பு, கோர்ட்டில் உள்ள வழக்குகள் அனைத்தும் இணையம் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்கக்கோரி வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வழக்கீல் கூட்டு குழு மாநில துணைத்தலைவர் சந்திரபோஸ், மாநில துணை செயலாளர் பால நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில், ஐகோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கூட்டு குழு ஐகோர்ட்டு நீதிபதிகளை சந்தித்து 6 மாத கால அவகாசம் கேட்டனர். ஆனால் இதுவரை ஐகோர்ட்டு எவ்வித பதிலும் தரவில்லை. இதை கண்டித்து வக்கீல்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க துணை தலைவர் சசிகுமார், செயலாளர் சிவக்குமார், இணை செயலாளர் மேனகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்