< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் வழக்கறிஞர்கள் 2 தரப்பாக பிரிந்து மோதல்
|19 July 2024 2:35 PM IST
மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் உடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு மற்றும் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இடையே வழக்குகளை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் 2 தரப்பாக பிரிந்து மோதிக்கொண்டனர். இதனால் எழும்பூர் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
வழக்கறிஞர்கள் இடையிலான மோதலில் இருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் உடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.