தேனி
வக்கீல்கள் உண்ணாவிரதம்
|பெரியகுளம் வக்கீல் சங்கம் சார்பில் பெரியகுளம் மூன்றாந்தல் பஸ் நிறுத்தத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.
பெரியகுளம் வக்கீல் சங்கம் சார்பில் பெரியகுளம் மூன்றாந்தல் பஸ் நிறுத்தத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத் தலைவர் அம்பாசங்கர் தலைமை தாங்கினார். பெரியகுளம் கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை தேனி மாவட்ட கோர்ட்டிற்கு மாற்றக்கூடாது. பெரியகுளம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் மற்றும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டுகளுக்கு உடனடியாக நீதிபதியை நியமிக்க வேண்டும். பெரியகுளத்தில் கூடுதல் குடும்ப நல கோா்ட்டு அமைக்க வேண்டும். இ-பைலிங் நடைமுறைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சங்க பொருளாளர் மகாராஜா, இணைச்செயலாளர் முத்தமிழரசன், நிர்வாக குழு உறுப்பினர் சன்னாசிபாபு, தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் பாலமுருகன், துணைச் செயலாளர் நாராயணசாமி, முன்னாள் செயலாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் மூத்த வக்கீல்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.