< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் உண்ணாவிரதம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வக்கீல்கள் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
1 Sept 2023 2:45 AM IST

திண்டுக்கல் வக்கீல்கள் நலச்சங்கம் சார்பில், திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

திண்டுக்கல் வக்கீல்கள் நலச்சங்கம் சார்பில், திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.திண்டுக்கல் வக்கீல்கள் நலச்சங்கம் சார்பில், திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் தனசேகர், துணைத்தலைவர் விவேக், துணை செயலாளர் தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மாற்றம் செய்வதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்தில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மலைராஜன், ஜெய்சங்கர், புவனேஸ்வரி மற்றும் வக்கீல்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

Related Tags :
மேலும் செய்திகள்