< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 12:15 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகம் முன்பு சீர்காழி வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கவிதா, தாமஸ் குமார், துணை செயலாளர்கள் சுதா, ஆனந்த செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மூத்த வக்கீல்கள் வீரமணி, சுந்தரய்யா, வெங்கடேசன், ராஜேஷ் உள்ளிட்டோர் தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை மத்திய அரசு பெற்று தரக்கோரியும், நீதிமன்றங்களில் ஈ-ஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ராம்குமார் நன்றி கூறினார். வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் நேற்று நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாயூரம் வக்கீல் சங்க தலைவர் ஜெகதராஜ், மயிலாடுதுறை வக்கீல் சங்கத் தலைவர் வேலுகுபேந்திரன் ஆகியோர் தங்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று வக்கீல்கள் யாரும் தங்கள் பணியை மேற்கொள்ள கோர்ட்டுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்