< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
வக்கீல்கள் 2-வது நாளாக நீதிமன்ற பணி புறக்கணிப்பு
|1 July 2023 11:57 PM IST
வக்கீல்கள் 2-வது நாளாக நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் இருப்பதால் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஒன்றை பெரம்பலூரில் அமைத்திட வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்கள் 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.