< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பு
|15 Sept 2023 12:44 AM IST
வக்கீல்கள் கோர்ட்டு பணியை புறக்கணித்தனர்.
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மத்திய அரசை கண்டித்து நேற்று வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர் மாற்றம், திருத்தம் கொண்டு வருவதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட மசோதாவை கண்டித்தும், அதனை உடனே வாபஸ் பெறவும், மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு மேற்கொள்வதை கண்டித்தும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் எனவும், கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேரணி செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர்.