< Back
மாநில செய்திகள்
பவானியில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு
மாநில செய்திகள்

பவானியில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
24 Aug 2023 2:36 AM IST

பவானியில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பவானி

பவானியில் கோர்ட்டு வளாகம் முன்பு, வக்கீல் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய தண்டனை சட்டத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்யும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் துணைத்தலைவர் கே.ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் ஆண்டவர், ஆர்.செந்தில்குமரன், மோகன், கிருஷ்ணமூர்த்தி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் பாலமுருகன் மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். சங்கத்தின் நிர்வாகிகள் முகமது ரபிக், செல்வராஜ், செங்கோட்டையன், மோகன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்