< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தர்மபுரியில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
|18 April 2023 12:30 AM IST
தர்மபுரி வக்கீல் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. தர்மபுரியை சேர்ந்த வக்கீல் செல்வமணியை தாக்கிய நபர்கள் மீது இண்டூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கொலை முயற்சி வழக்காக மாற்ற வேண்டும். இதில் தொடர்புடைய நபர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தர்மபுரியில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.