< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு  கூட்டமைப்பு தலைவர் தகவல்
நாமக்கல்
மாநில செய்திகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு கூட்டமைப்பு தலைவர் தகவல்

தினத்தந்தி
|
20 Sept 2022 12:15 AM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு கூட்டமைப்பு தலைவர் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வக்கீல் ஜமிலாபானுவை அவரது அலுவலகத்தில் கொல்ல முயன்றதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிட வலியுத்தியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட வக்கீல்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

எனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வக்கீல்கள் நீதிமன்ற பணிக்கு செல்லாமல் விலகியிருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்