< Back
மாநில செய்திகள்
துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது
திருச்சி
மாநில செய்திகள்

துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது

தினத்தந்தி
|
20 Jun 2023 12:48 AM IST

துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது செய்யப்பட்டார்.

மதுரை காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகள் நந்தினி. வக்கீலான இவர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை வக்கீல் நந்தினி தனது தங்கை நிரஞ்சனாவுடன் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே வந்தார். அங்கு மத்திய- மாநில அரசுகளை கண்டித்து பொதுமக்களிடம் திடீரென துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார். இது பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று வக்கீல் நந்தினி மற்றும் அவருடைய தங்கை நிரஞ்சனா ஆகிய 2 பேரையும் கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கோட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்