< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
|15 Jun 2022 1:18 AM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துக்குறிச்சி கிராமத்தில் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையிலான போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆத்துக்குறிச்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்று சோதனை செய்தபோது, கடையில் ஒருவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஆத்துக்குறிச்சி கிராமம் மெயின்ரோட்டை சேர்ந்த குழந்தைவேலு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.