< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
சட்டக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
|11 April 2023 12:30 AM IST
திண்டுக்கல்லில் சட்டக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாற்று சமரச தீர்வு தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நீதிபதி எஸ்.சிவகடாட்சம் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் மாற்று சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் குடும்ப நல நீதிபதி விஜயகுமார், கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், மகிளா கோர்ட்டு நீதிபதி சரண், வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிபதி ஜான்மினோ, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதிராஜா மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.