< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
|11 Oct 2023 1:12 AM IST
சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மண்டல மேலாளர் விஜயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை மண்டல மேலாளர் ஆதிலட்சுமி, உதவி மேலாளர் (வாணிபம்) அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தில் தொடங்கிய பேரணி கலெக்டர் அலுவலக வளாகம் வழியாக நுழைவு வாயில் வரை நடைபெற்றது.