< Back
மாநில செய்திகள்
சட்டம், ஒழங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது: எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டு
கரூர்
மாநில செய்திகள்

சட்டம், ஒழங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது: எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டு

தினத்தந்தி
|
17 Sept 2022 12:15 AM IST

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது என அ.தி.மு.க. ஆர்ப் பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவைரோட்டில் கண்டன ஆர்ப் பாட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் திருவிகா, முன்னாள் அமைச்சர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்ஆர்ப்பாட்டத்தில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், மின் கட்டணத்தை உயர்த்தி உள்ள தமிழக அரசு மத்திய அரசின் அழுத்தத்தால் தான் கட்டணத்தை உயர்த்தியதாக கூறுகிறார்கள். தி.மு.க.வினர் கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள். எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளன.

அ.தி.மு.க. வெற்றி பெறும்

3 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றியை இழந்து உள்ளோம். இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் 200 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும். 10 ஆண்டு ஆட்சிக்கு மாறுதல் வேண்டும் என கூறி இளைஞர்கள் மாற்றி வாக்களித்ததால் இன்று வருத்தப்பட்டு கொண்டு உள்ளனர். அ.தி.மு.க.வை உடைத்து விட வேண்டும், மீண்டும் ஆட்சிக்கு வராத நிலையை உருவாக்க வேண்டும் என நினைத்தார்கள்.தமிழகத்தில் உள்ள 1½ கோடி தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில், 2,570 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி தான் தமிழகத்தின் வருங்கால முதல்-அமைச்சர். கட்சியின் இடைக்கால பொது செயலாளர் என அறிவித்து உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். அப்போது அ.தி.மு.க. கோட்டையில் கொடி ஏற்ற வேண்டும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் நகரப்பகுதி செயலாளர் வி.சி.கே. ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்