< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சரிந்துள்ளது - அண்ணாமலை
|6 July 2024 12:42 PM IST
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சரிந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை வானகரத்தில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய வேளாண் மந்திரி சிவராஜ்சிங் சவுகான். இணைமந்திரி எல். முருகன் , பாஜக மூத்த தலைவர் தமிழிசை,மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர் .
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சரிந்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளையாகத்தான் உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுகிறது.தமிழகத்தில் சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என தெரிவித்தார்.