< Back
மாநில செய்திகள்
23 ஆயிரத்து 134 குற்ற நிலுவை வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டும்
திருப்பூர்
மாநில செய்திகள்

23 ஆயிரத்து 134 குற்ற நிலுவை வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டும்

தினத்தந்தி
|
19 Nov 2022 11:48 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 134 குற்ற நிலுவை வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டும் என்று முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 134 குற்ற நிலுவை வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டும் என்று முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பு கூட்டம்

திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வழக்குகளை விரைவுபடுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக்கூட்டம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, மாவட்ட நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வக்கீல் கனகசபாபதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், குற்றங்கள் குறைய செய்ய வேண்டிய நடவடிக்கைகள், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது குறித்த ஆலோசனை மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் குற்ற வழக்குகள் மட்டும் 23 ஆயிரத்து 134 நிலுவையில் உள்ளது.

அவற்றை விரைந்து தீர்வு காணக்கோரியும், நிலுவையில் உள்ள பிடியாணையை நிறைவேற்றவும் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்