< Back
மாநில செய்திகள்
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சலவை தொழிலாளி சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சலவை தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
3 May 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த சலவை தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாகதுருகம்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் கரியப்பா நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 61), சலவை தொழிலாளி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர். மாரிமுத்துவும், அவரது மகன் கருப்பையனும்(40) அவ்வப்போது குடித்துவிட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று கருப்பையன் குடித்துவிட்டு மாரிமுத்து வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு மாடிப்படியில் நின்று கொண்டிருந்த மாரிமுத்துவிற்கும், கருப்பையாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக கருப்பையாவின் கால், மாரிமுத்துவின் மீது பட்டதில் நிலை தடுமாறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரிமுத்துவின் மற்றொரு மகன் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்