அரியலூர்
நூலகத்தில் மெய்நிகர் பிரிவு தொடக்கம்
|நூலகத்தில் மெய்நிகர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள முழு நேர கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலக பிரிவு ெதாடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் அரியலூர் மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன் மெய் நிகர் நூலக பிரிவை தொடங்கி வைத்து பேசினார். உடையார்பாளையம் கிளை நூலகர் முருகானந்தம், மெய்நிகர் நூலக கருவி செயல்முறை பற்றி பயிற்சி அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், இதில் வாசிப்பதை காட்டிலும், 360 டிகிரி கோணத்தில் மெய் நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக கற்றுக் கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பமும் ஒரு ஆசிரியர் தான். இந்த கருவியில் மாணவ, மாணவிகள் பார்க்கும்போது அவர்களுக்கு ஆழ்கடல், மலை காடுகள், சிகரம், பணிப்பாறைகள், விண்வெளி கண்டங்கள், நாடுகள், கோள்கள், இயக்கம், சூரிய குடும்பம், வானில் நடக்கும் அற்புதங்கள், ஜூராசிக் வேர்ல்டு போன்றவைகளை நேரில் காண்பது போல் இருக்கும், என்றார். விழாவில் அரசு பள்ளி ஆசிரியர் ராமலிங்கம், நூலகர்கள் அமுதா, கார்வண்ணன், குணசேகரன், தேவேந்திரன், போட்டித்தேர்வு மாணவர்கள், நூலக வாசகர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் பெரியண்ணன் நன்றி கூறினார்.