< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு கோவில்களின் தகவல்களை அறிய புதிய செல்போன் செயலி தொடக்கம்
மாநில செய்திகள்

தமிழ்நாடு கோவில்களின் தகவல்களை அறிய புதிய செல்போன் செயலி தொடக்கம்

தினத்தந்தி
|
19 May 2023 2:03 PM IST

திருக்கோயில் மொபைல் ஆப் மூலம் முதற் கட்டமாக 50 திருக்கோயில்களில் சேவைகளையும் திருப்பணிகளையும் அறிந்து கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

திருக்கோயில் மொபைல் ஆப் மூலம் முதற் கட்டமாக 50 கோயில்களின் சேவைகளையும் திருப்பணிகளையும் அறிந்து கொள்ளலாம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இருக்கும் திருக்கோவில்களின் தகவல்களைப் பற்றி பக்தர்கள் எளிதாக அறிய அவர்களுக்கு உதவும் வகையில் திருக்கோயில் விவரம் பற்றிய முழு தகவல் உள்ளடக்கிய திருக்கோயில் என்ற செல்போன் செயலி தொடங்கப்பட்டது. 48 முது நிலை திருக்கோவில்களின் பிரசாதம் பக்தர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தபால் துறையுடன் இணைந்து அஞ்சலி வழி பிரசாதம் அனுப்பும் திட்டமும் தொடங்கப்பட்டது.

அதனை அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருக்கோயில் மொபைல் ஆப் மூலம் முதற் கட்டமாக 50 திருக்கோயில்களில் சேவைகளையும் திருப்பணிகளையும் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.


மேலும் செய்திகள்