< Back
மாநில செய்திகள்
பழனிசெட்டிபட்டியில்108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
தேனி
மாநில செய்திகள்

பழனிசெட்டிபட்டியில்108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

தினத்தந்தி
|
17 Jun 2022 7:52 PM IST

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடந்தது

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடந்தது. விழாவில் பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கி ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். இதில், துணைத்தலைவர் மணிமாறன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளின் அவசர கால மருத்துவ சேவைக்கு தேனி அல்லது வீரபாண்டியில் இருந்து ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் பழனிசெட்டிபட்டியில் இருந்தே இயக்கப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்