< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில் பெண்ணிடம் நகைப்பறிப்பு
|15 Oct 2023 1:00 AM IST
கிருஷ்ணகிரியில் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ௨ பேர் நகையை பறித்து சென்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 59). இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜெயஸ்ரீ கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஜெயஸ்ரீ கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.