< Back
மாநில செய்திகள்
கடந்த ஆண்டு 242 வழக்குகள் பதிவு
சேலம்
மாநில செய்திகள்

கடந்த ஆண்டு 242 வழக்குகள் பதிவு

தினத்தந்தி
|
6 Jan 2023 12:47 AM IST

குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் கடந்த ஆண்டு 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் கடந்த ஆண்டு 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கு

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்துபவர்கள், கலப்பட டீசல் விற்பவர்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ரேஷன் அரிசி கடத்தியது சம்பந்தமாக 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 200 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யயப்பட்டு உள்ளன.

அதே போன்று மண்எண்ணெய் கடத்தலில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 225 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கியாஸ் சிலிண்டர் கடத்தியதில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 260 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

242 வழக்குகள்

மேலும் கலப்பட டீசல் தொடர்பாக 5 வழக்குகள் மற்றும் ரேஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு என மொத்தம் கடந்த ஆண்டு 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 282 பேர் கைது செய்யப்பட்டு, மோட்டார் சைக்கிள், சரக்கு வேன் உள்ளிட்ட 73 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்