< Back
மாநில செய்திகள்
ஆடி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை; பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
மாநில செய்திகள்

ஆடி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை; பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
14 Aug 2022 6:53 PM IST

பல்வேறு ஊர்களில் இருந்து வந்த வாகனங்களால் பெரியபாளையம் பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அருள்மிகு பவானி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி மாதம் தொடங்கியது முதல் பெரியபாளையம் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளைக் கண்டு சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் ஆடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு இன்று காலை முதல் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர்.

இதில் பலர் தங்கள் சொந்த வாகனங்கள் மூலமாக கோவிலுக்கு வருகை தந்த நிலையில், சுமார் 5 மணி நேரத்திற்கு அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை அணிவகுத்து நின்றன. இதையடுத்து மெல்ல போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டு வாகனங்கள் செல்லத் தொடங்கின.

ஆடி மாதம் முழுவதும் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் காரணமாக கோலாகலமாக காட்சியளித்தது. இந்நிலையில் இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்களின் வருகை காணப்பட்டது.

மேலும் செய்திகள்