< Back
மாநில செய்திகள்
ஆடி கடைசி சனிக்கிழமை: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்
மாநில செய்திகள்

ஆடி கடைசி சனிக்கிழமை: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
13 Aug 2022 4:01 PM IST

ஆடி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

காரைக்கால்,

ஆடி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், அதிகாலை நான்கு முப்பது மணிக்கு நடை திறக்கப்பட்டு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதிக அளவிலான பக்தர்கள் வருகை காரணமாக, திருநள்ளாறு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்