< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
பொன்னேரி அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி
|29 Jun 2022 1:03 PM IST
பொன்னேரி அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலியானார்.
பொன்னேரி அருகே உள்ள மவுத்தம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 50). தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் ஆரணி அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக வேலை செய்துவந்தார். இவர் நேற்று மாலை 6 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் பொன்னேரி பஞ்செட்டி நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்புறம் வந்த லாரி மோதியதில் யுவராஜ் தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.