< Back
மாநில செய்திகள்
லாரி மோதி பேராசிரியை பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்
சென்னை
மாநில செய்திகள்

லாரி மோதி பேராசிரியை பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்

தினத்தந்தி
|
26 May 2022 12:15 PM IST

புழல் போலீஸ் நிலையம் எதிரே ஜி.என்.டி. சாலையில் லாரி மோதி பேராசிரியை கணவர் கண்எதிரே பரிதாபமாக இறந்தார்.

சென்னையை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகர் 20-வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் கேட்டரிங்கில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பூஜா(வயது 24). இவர், மாதனாங்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை கல்லூரியில் இருந்து பூஜாவை , அருண்குமார் தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்தார். புழல் போலீஸ் நிலையம் எதிரே ஜி.என்.டி. சாலையில் சென்றபோது மாவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த பேராசிரியை பூஜா, கணவர் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து மாத வரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மணலியை சேர்ந்த சக்திவேல் (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்