< Back
மாநில செய்திகள்
லாரி மோதி என்ஜினீயர் பலி
சேலம்
மாநில செய்திகள்

லாரி மோதி என்ஜினீயர் பலி

தினத்தந்தி
|
30 Jun 2022 1:33 AM IST

கெங்கவல்லி அருகே லாரி மோதி என்ஜினீயர் பலியானார்.

தலைவாசல்:

கெங்கவல்லி தாலுகா தெடாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருடைய மகன் நவீன் குமார் (வயது 21), என்ஜினீயர். இவர் தனது நண்பரான சந்தோஷ் என்பவருடன் ஒரு மொபட்டில் தெடாவூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் நூத்தாப்பூர் கிராமத்திற்கு சென்றார். வீரகனூர்-வெள்ளையூர் செல்லும் சாலையில் முன்னே சென்ற லாரியை மொபட் கடக்க முயன்றது.

அப்போது எதிர்பாராவிதமாக மொபட் மீது லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த நவீன்குமார் மற்றும் சந்தோஷ் ஆகிய 2 பேரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நவீன்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். அரசு ஆஸ்பத்திரியில் சந்தோஷ் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்