< Back
மாநில செய்திகள்
செம்பொன் ஜோதிநாதர் கோவிலில் விளக்கு பூஜை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

செம்பொன் ஜோதிநாதர் கோவிலில் விளக்கு பூஜை

தினத்தந்தி
|
8 Aug 2022 9:56 PM IST

தியாகதுருகம் செம்பொன் ஜோதிநாதர் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் விருகாவூர் சாலையில் ஆண்டிகொட்டாய் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை உடனுறை செம்பொன் ஜோதிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தையொட்டி விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் சிவனடியார்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்